இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்ற இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாட்டு இறைச்சி பரிமாறப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்ததாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது எக்ஸ் தளத்தில்  பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் திடீர் மோதலின் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டதாக அந்த வீடியோ காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.

இந்தச் சம்பவத்தின் முழுமையான உண்மைத்தன்மை மற்றும் அசல் பின்னணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்குப் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து, இதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

“>

வெளிநாடுகளில் உள்ள உணவகங்களின் விதிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உணர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தற்பொழுது காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த  வீடியோ தொடர்ந்து லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வருகிறது.