இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிய அவர், ஒட்டுமொத்தமாக 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்து இடி மின்னலாய் களம் இறங்கினார்.
Leaked Instagram Live of Srilanka Fan.
“Aagya , Jhagra Kiya , mar dia, jala dia..
Inshort Lanka laga dia.” pic.twitter.com/yCJKwE9LqJ— Sunil Gavaskar (@virender_swag) June 21, 2026
முன்னதாக, இதே தொடரின் லீக் போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் தோற்றபோது, இலங்கை வீரர்களுக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே மைதானத்தில் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானது. அதற்குப் பழிதீர்க்கும் விதமாக இறுதிப் போட்டியில் வைபவ் ஆடிய ஆட்டத்தைக் கண்டு இலங்கை ரசிகரே மிரண்டு போயுள்ளார். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு சுவாரசியமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் வைபவ் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்னால் இருக்கும் இலங்கை ரசிகர் ஒருவர், “அவன் வந்தான், சண்டை போட்டான், அடிச்சு நொறுக்கினான்.. சுருக்கமா சொல்லணும்னா இலங்கைக்கு ‘லங்கா’ வச்சிட்டான் (முற்றுப்புள்ளி வச்சிட்டான்)” எனப் பாராட்டும் வீடியோ தற்போது இணையத்தில் மரண மாஸாக வைரலாகி வருகிறது.
