ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற ‘ரிட்ஜ் மைதானத்தில்’ அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பொது இடத்தில் ஆபாசமான செய்கைகளிலும் அநாகரிகமான நடத்தைகளிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சிம்லா போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பயணியைக் கண்டறிந்து காவலில் எடுத்துள்ளனர். வெளிநாட்டினராக இருந்தாலும் இந்தியச் சட்டங்களையும், பொது ஒழுக்கத்தையும் மதிக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் இதுபோன்ற அநாகரிகமான செயல்களை சகித்துக்கொள்ள முடியாது என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“>

இந்தத் தவறான செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த சுற்றுலாப் பயணியின் சமூகப் பொறுப்பற்ற செயலைக் கண்டித்ததோடு, அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே வேளையில், சிம்லா போலீஸாரின் விரைவான நடவடிக்கையைப் பாராட்டியுள்ள மக்கள், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கிருள்ள கலாச்சாரம், சட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நெறிமுறைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும், பொறுப்புள்ள சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.