சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோதமான வீடியோக்கள் வெளியாகி மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளையே நகரும் வீடாக மாற்றி, நடுரோட்டில் ஓட்டிச் செல்லும் ஒரு வியக்கத்தக்க வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பரபரப்பான சாலையில், பைக்கின் மீது அடுக்கடுக்காகப் பொருட்களை வைத்து, சமநிலையை சற்றும் இழக்காமல் அவர் வண்டியை ஓட்டிச் செல்லும் விதம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நபரின் அபாரமான பேலன்சிங் திறமையைக் கண்டு, சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் வியப்புடன் அவரைப் பார்த்தபடி கடந்து செல்கின்றனர்.

“>

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களது கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், அந்த நபரின் அசாத்தியமான சமநிலைத் திறமையைப் பாராட்டி, “இவர் பைக்கிலேயே ஒரு நடமாடும் வீட்டைக் கட்டிவிட்டார்” என்று நகைச்சுவையாகக் கமெண்ட் செய்துள்ளனர்.

அதே வேளையில், பரபரப்பான பொதுச் சாலையில் இதுபோன்று அதிகப் சுமையுடன் செல்வது மிகவும் ஆபத்தானது என்றும், இது சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்றும் பல பயனர்கள் தங்களது கவலைகளையும் எச்சரிக்கைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.