பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா (25) என்ற இளம்பெண், தனது காதலனுடன் திருமணமான தோழிக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்து பழிவாங்கிய விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா தனது காதலனைச் சந்திக்கச் செல்லும்போது திருமணமான தனது தோழியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் காதலனுக்கும் தோழிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஸ்வேதாவுக்குத் தெரியாமல் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் காதலனின் செல்போனை வாங்கிப் பார்த்த ஸ்வேதா, அதில் தோழி உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அவற்றை தனது செல்போனுக்குப் பகிர்ந்து கொண்டு இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.
தனது காதலுக்குத் துரோகம் செய்த இருவரையும் பழிவாங்கத் திட்டமிட்ட ஸ்வேதா, அந்த ஆபாசப் படங்களைத் தோழியின் கணவருக்கே அனுப்பி வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தோழியின் கணவர் அளித்த புகாரின் பேரில், சாம்ராஜ்பேட்டை போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்வேதாவை அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் கைதான ஸ்வேதாவின் செல்போனைப் பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் அரசியல்வாதிகள் உள்பட பலரின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த போலீசார், ஸ்வேதாவின் பின்னணி மற்றும் இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
