பல தசாப்தங்களுக்குப் பிறகு நியூயார்க் நிக்ஸ் (New York Knicks) அணி NBA சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதை அடுத்து, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பிரமாண்டமான கொண்டாட்டப் பேரணி நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இந்த விழாவில், எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவினர், குறிப்பாக நீல நிற ஆடை அணிந்திருந்த பெண் ஒருவர் அந்த நபரின் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்.

ஆனால், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த ரசிகர், தனக்கு உயிர் பிச்சை போட்ட அந்தப் பெண்ணிற்கு நன்றி கூறுவதற்குப் பதிலாக, அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றார்.

அந்தப் பெண் அலறி அடித்துக் கொண்டு பின்வாங்கியும், அந்த நபர் மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்க முயன்ற அநாகரிகக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே பேரணியில் நியூயார்க் போலீஸார், நிக்ஸ் அணியின் இளம் வீரரான டைலர் கோலெக் (Tyler Kolek) என்பவரை தவறுதலாக ஒரு சாதாரண ரசிகர் என்று நினைத்து தடுத்து நிறுத்திய மற்றொரு சுவாரசியமான குழப்பமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.