உணவுப் பிரியர்களின் ஃபேவரிட் ஸ்நாக்ஸான சமோசா மற்றும் கச்சோரி தயாரிப்பில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தின்பண்டங்கள் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மைதா மாவை, நபர் ஒருவர் தனது கால்களால் கொடூரமாக மிதித்து பிசையும் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை உப்பசமடைய வைத்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படும் இந்தத் துயரமானக் காட்சி, தின்பண்ட பிரியர்களிடையே கடும் கொந்தளிப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் எவரும், “இனி கடையில சமோசா பக்கமே போகக்கூடாது” என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பொதுமக்களின் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் இதுபோன்ற உணவகங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.