சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில், பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடீயோவில், வீதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென கடிக்கத் தொடங்குகிறது. சிறுவன் வலியால் அலறியதை அடுத்து, சுற்றியிருந்த மற்ற தெருநாய்களும் ஒன்றாகச் சூழ்ந்து வந்து அந்தச் சிறுவனை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறத் தொடங்கின. நாய்களின் பிடியில் சிக்கி அந்தச் சிறுவன் மரண பயத்தில் துடிதுடித்த காட்சி பார்ப்பவர்களைக் கலங்கச் செய்துள்ளது.

​அப்போது சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த வெறிநாய்களை அங்கிருந்து அடித்து விரட்டி, சிறுவனை மிகவும் பாதுகாப்பாக மீட்டனர். தற்போது இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறி தங்களது கடுமையான கோபத்தையும், ஆவேசத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.