வந்தே பாரத் ரயில் அதன் அதிநவீன வசதிகளுக்கும், சரியான நேரத்திற்கு இயங்குவதற்கும் பெயர் பெற்றது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயிலைப் பிடிக்க பெண் பயணி ஒருவர் கையில் சாமான்களுடன் அதன் பின்னால் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

அவர் மிகுந்த பதற்றத்துடன் ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டி ஓடினார். அந்தப் பெண் ரயிலைத் தவறவிட்டுவிட்டாரோ என்று எண்ணிய நிலையில், அந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவின்படி, அந்தப் பெண்ணின் அவசர நிலையைக் கண்டு, ரயில் மேலாளர் மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்த உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்தப் பெண்ணும் அவருடன் இருந்தவரும் பத்திரமாக ரயிலில் ஏறிக்கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by लोको पायलट साहब (@manu_rail_pilot)

“>
இந்தச் செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் ரயில் மேலாளரின் மனிதாபிமானத்தைப் பாராட்டியும், மற்றவர்கள் பயணிகள் எப்போதும் ரயிலுக்குத் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.