ஜன்னல் வழியாகக் குச்சி ஒன்றில் மொபைல் போனை கட்டி, குளியலறையில் இருந்த எனது தாயார் மற்றும் அத்தையை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்ற நபரைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டோம் என்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய காமுகன் மீது போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த ஜூன் 8-ம் தேதி நள்ளிரவில், பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், நீளமான குச்சியின் நுனியில் தனது மொபைல் போனைப் பொருத்தி, வீட்டின் உயரமான குளியலறை ஜன்னல் வழியாகப் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது ஜன்னலுக்கு வெளியே ஏதோ அசைவதைக் கவனித்த 16 வயது சிறுவன், உடனடியாகச் சென்று அந்த வீடியோ பதிவை தடுத்து நிறுத்திவிட்டுப் சத்தம் போட்டதால், பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில்,அந்தரங்கத்தை ஆபாசமாகப் படம் பிடித்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபைல் டவர் சிக்னல்களை கொண்டு குற்றவாளியின் இருப்பிடத்தை நள்ளிரவோடு நள்ளிரவாகத் தேடி பிடித்தனர்.