இந்திய ரயில்களில் பயணம் செய்யும் போது, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை மற்றவர்களுக்காக “அட்ஜஸ்ட்” செய்யக் கோரும் விவகாரம் எப்போதும் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயிலுக்குள் இரண்டு பயணிகள் தங்களின் இருக்கைக்காகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. வீடியோவை எடுக்கும் நபர், தனக்கு முறைப்படி ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 24-ல் (கீழ் படுக்கை – Lower Berth) அமர்ந்திருக்கும் சிவப்பு நிற சட்டை அணிந்த நபரை எழுந்து செல்லுமாறு அமைதியாகக் கோருகிறார். ஆ
னால், இருக்கையை ஆக்கிரமித்திருக்கும் அந்த நபர், தனக்கு இருக்கை எண் 23 ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்வதால் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்றும் பிடிவாதம் பிடிக்கிறார். தனக்கு மற்றொரு கோச்சான B1-ல் இருக்கை இருந்தாலும், குடும்பத்தை விட்டுத் தனியாகச் செல்ல முடியாது என அவர் மறுக்கிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ எடுப்பவர், “நீங்கள் குடும்பத்துடன் வந்தால், அதற்காக நான் எனது இருக்கையை உங்களுக்குத் தாராளமாக விட்டுக் கொடுத்துவிட வேண்டுமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்.
A passenger refused to vacate someone else’s reserved seat.
His argument?
“I’m travelling with family.”
The actual seat holder disagreed.
Should families be allowed to adjust seats for convenience?
Or should reserved seats be respected no matter what?
Because if everyone… pic.twitter.com/CHD4ONcIcQ
— Gems Of Railway (@GemsOfRailway) June 14, 2026
பகலில் கீழ் படுக்கையில் அமர்ந்து பயணிக்க தனக்கு உரிமை உண்டு என்றும், இரவு நேரத்தில் மட்டுமே மேல் படுக்கை தூங்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் பயணி வாதாடுகிறார். இருக்கையை காலி செய்யாவிட்டால் டிடிஇ (TTE) அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரை (RPF) அழைப்பேன் என்று எச்சரித்தும், அந்த நபர் அலட்சியமாக தின்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் இதில் இரண்டு பிரிவாகப் பிரிந்து தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர், “டிக்கெட் புக் செய்தவருக்குத்தான் முழு உரிமை உண்டு; குடும்பத்தைக் காரணம் காட்டி அடுத்தவர் உரிமையைப் பறிப்பது அநாகரிகமானது; அதுமட்டுமன்றி ரயிலுக்குள் குப்பைகளைப் போடும் இவர்களுக்குக் குறைந்தபட்ச பொது ஒழுக்கம் கூட இல்லை” என ஆக்கிரமிப்பு செய்தவரைச் சாடியுள்ளனர். மற்றொரு தரப்பினரோ, “பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் பயணிக்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பயணி B1 கோச்சிற்கு அட்ஜஸ்ட் செய்து சென்றிருக்கலாம், வீடியோ எடுத்து இவ்வளவு பெரிய சண்டையாக்குவது ஓவர் ரியாக்ஷன்” என்று பதிவிட்டு வருகின்றனர்.
