இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் ஒரு விழாவில் பேசிய பேச்சு, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், நாம் உதவி கேட்கிறோமோ, கேட்கலையோ, நம்மை பட்டினி போட்டுவிட மாட்டார்கள் என்ற தைரியம் இருக்கும் என்றும், அதேபோல கடவுளை நாம் கூப்பிடுகிறோமோ, இல்லையோ, ஆனால் நாம் கூப்பிட்டவுடன் அவர் வந்துவிடுவார் என்ற சந்தோஷம் இருக்கும் என்றும் அவர் உருக்கமாகப் பேசினார்.
நேற்று 🔔 : முதலமைச்சர் @TVKVijayHQ மொபைல் நம்பர் நம்மிடம் இருந்தால் அது தைரியம் தான ! 👌😅
~ ஏ.ஆர்.முருகதாஸ் pic.twitter.com/maAEnZtdOI
— Prakash Vijay (@PrakazVijay_Of) June 13, 2026
மேலும், முதல்வரை நாம் அழைக்கிறோமோ, அழைக்கலையோ, ஆனால் அவருடைய நம்பர் நம்மிடம் இருக்கிறது என்பதே ஒரு பெரிய தைரியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏ. ஆர். முருகதாஸ் முதல்வர் விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
