நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (TVK) ஆலோசனைக் கூட்டத்திற்கு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி தனது குழந்தையுடன் வருகை தந்தார். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், ஒரு தாயாக அவர் குழந்தையுடன் கூட்டத்தில் அமர்ந்திருந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

​அப்போது அங்கு வந்த அமைச்சர் என்.ஆனந்த், பல்லவி எம்எல்ஏ-வின் குழந்தையை மிகுந்த அன்போடு கைகளில் ஏந்தி, கொஞ்சி விளையாடி முத்தமிட்டார். அரசியல் மேடையில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியான பாசக் காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது.