திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பாம்பன் பகுதி வரை சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட தூரம் பயணித்து அலறவிட்ட 800 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட காட்டெருமையை, தமிழக வனத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ள வரலாற்றுச் சாதனைச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இந்த முரட்டு காட்டெருமையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுச் சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அசாத்திய முயற்சிகளுக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட அந்த காட்டெருமை, நவீன கூண்டில் அடைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுத் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் தற்பொழுது பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை வரலாற்றிலேயே மிக நீண்ட தூரம் ஒரு காட்டெருமையை அனாயசமாகப் பாதுகாப்பான முறையில் கொண்டு சென்று இடமாற்றம் செய்த முதல் ஆபரேஷன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் திரில்லர் சினிமா பாணியில் வனத்துறையினர் நிகழ்த்திக் காட்டியுள்ள இந்த மாபெரும் அசாத்திய மீட்புப் பணி மற்றும் கூண்டில் இருக்கும் காட்டெருமையின் புகைப்படங்கள், தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
