டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கையோடு, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிச் செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், தன் மீதான நீக்கத்தைப் பெரிதுபடுத்தாமல், இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். மேலும், மும்பையில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இந்திய கேப்டன் உருவாகியிருப்பதற்காக, மும்பை கிரிக்கெட் குடும்பமாகத் தாங்கள் பெருமைகொள்வதாகவும், தாங்கள் இருவரும் இணைந்து மும்பைக்காகவும் இந்தியாவிற்காகவும் நீண்ட நாட்களாக விளையாடியுள்ளோம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.