விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னால் மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளரும் திருமாவளவனின் வலதுகரமாகவும் விளங்கிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு சமீபத்தில் கட்சியிலிருந்து விலகினார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்ததால் அதிருப்தி காரணமாக பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தன் ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்தார்.
அவர் கிட்டத்தட்ட 1200 பேருடன் அறிவாலயத்திற்கு வந்து ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி டி ஆர் பாலு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது
