சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில், செங்கல்பட்டு தொகுதி முன்னாள் அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் நடத்திய அதிரடி ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடக விவாதங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு அவர் காரசாரமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காங்கிரசின் துரோகங்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும், இதர கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து விமர்சனங்களை வைக்க வேண்டும் என்றும் கறாராகக் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் த.வெ.க. அரசின் குறைகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை ஊடக விவாதங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வலுவாகச் சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தனது செய்தித் தொடர்பாளர்களுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்