பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள வாட்டர் ஸ்லைடுகளில் விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், அங்கு சற்றும் எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்கள் வேடிக்கையாக மாறிவிடுவதுண்டு. அதுபோன்ற ஒரு கலகலப்பான விபத்து வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வாட்டர் பார்க் ஒன்றில் இளம்பெண் ஒருவர் அங்கிருந்த வாட்டர் ஸ்லைடில் அமர்ந்து கொண்டு மிகவும் உற்சாகமாக விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில் தனக்கு பின்னால் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் சற்றும் கணிக்கவில்லை.
हमला अचानक हुआ 🤣🤣🤣 pic.twitter.com/s0zhm824Yv
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) June 3, 2026
அவர் ஸ்லைடின் நடுவே அமர்ந்திருந்த அதே வேளையில், அவருக்குப் பின்னால் மற்றொரு பெண் மிக அதிவேகமாக அந்த ஸ்லைடில் சறுக்கிக் கொண்டு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த பெண் முன்னால் அமர்ந்திருந்த பெண் மீது பலமாக மோதினார். இந்த திடீர் மோதலின் வேகத்தில் நிலைதடுமாறிய இரு பெண்களும் அந்த ஸ்லைடில் இருந்து தலைகீழாகப் பாய்ந்து, கீழே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் நேராக விழுந்தனர். இந்த வேடிக்கையான விபத்தின் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவிய நிலையில், “பாவம், அந்தப் பொண்ணு இதை எதிர்பார்க்கவே இல்ல!” என்று நெட்டிசன்கள் பலரும் சிரிப்புடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
