தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடியாக நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபகாலமாக முதலமைச்சர் விஜய்யைக் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதன்முறையாக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த உயர்மட்ட அரசியல் சந்திப்புகள், தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் தானா என்ற எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் பலரிடமும் கிளப்பியுள்ளது.