தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தரப்பிடம் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், நேற்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதன்முறையாக முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அதிரடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

​டெல்லி மேலிடத்தின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து கோட்டைக்கு வந்து முதலமைச்சரைச் சந்திப்பது, வெறும் மரியாதை நிமித்தமானது அல்ல என்றும், இதன் பின்னணியில் பலத்த அரசியல் கணக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்புகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தவெகவின் ஆதரவைப் பெற காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வரும் வேளையில், முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.