கோடைக் காலம் என்றாலே மாம்பழங்களின் சீசன் தான். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை பயங்கரமாக சிரிக்க வைத்துள்ளது. கோவிந்த் பிரதாப் சிங் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு நபர், வழியில் இருந்த ஒரு தோப்பில் தொங்கிய மாம்பழங்களைப் பார்த்ததும் தன் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்த காரியமும், அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசும் தான் இந்த வைரல் பின்னணி.

 

ரயில் ஒரு இடத்தில் மெதுவாகச் சென்றபோது, அருகில் மாம்பழங்கள் நிறைந்த ஒரு அழகான தோப்பைக் கண்ட அந்த நபர், யோசிக்காமல் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். சில மாம்பழங்களைப் பறித்து பயணத்தின் சுவையை கூட்டலாம் என்று அவர் நினைத்தார். ஆனால், அவர் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தபோது, தோப்பின் உரிமையாளர் அதைப் பார்த்துவிட்டு தடியுடன் அவரை நோக்கி ஓடிவந்துள்ளார். பயந்துபோன அந்த நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார்.

ஆனால், அதற்குள் விடாமல் துரத்தி வந்த உரிமையாளர், ரயிலின் வாசலில் தொங்கியபடி தப்பிக்க முயன்ற அந்த நபருக்குத் தடியால் தர்ம அடி கொடுத்துப் வெளுத்து வாங்கினார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தம்பிக்கு மாம்பழம் கிடைக்கல… ஆனா புளியம்பழ அடி கிடைச்சிருச்சு”, “ஷோரூம்ல கூட இந்த அளவுக்கு சர்வீஸ் பண்ண மாட்டாங்க” என கமெண்ட்களைப் பறக்கவிட்டு, வீடியோவை பயங்கரமாக ஷேர் செய்து வருகின்றனர்.