பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகே, வாலிபர் ஒருவர் முதியவரைப் பகிரங்கமாக மிரட்டி, அவதூறு வார்த்தைகளால் வசைபாடும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள பக்கமான ‘எக்ஸ்’ தளத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு வாலிபர் தனது மொபைல் போன் கேமராவை ஆன் செய்து, அங்கிருக்கும் முதியவர் ஒருவரை நோக்கி நகர்கிறார். அந்த வாலிபரைக் கண்டு முதியவர் பயந்து நடுங்குவதைக் காட்டி, “இவன் பயப்படுகிறான்… ஏன் இப்படி நடுங்குகிறாய்? கிழவா, நீ செத்து மடி…” என்று மிகவும் ஆபாசமான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடித் துன்புறுத்துகிறார்.
இதைக் கண்டு அந்த முதியவர் மிகுந்த அசௌகரியத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
‘https://x.com/RMXnews/status/2061886947467919775?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2061886947467919775%7Ctwgr%5E68d831cd874fad5cb8b4cb3a130c9c6ee9e03de4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Fwhy-are-you-trembling-like-a-dk-syrian-asylum-seeker-harasses-elderly-french-man-near-eiffel-tower-video
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், முதியவரைத் துன்புறுத்திய அந்த வாலிபர் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு “அகதி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல என்றும், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் குழுக்களாக இணைந்து, அங்குள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி செய்பவர்கள், இளம் பெண்கள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிய மக்களைத் திட்டமிட்டு மிரட்டி, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பெருமையாகப் பகிர்ந்து வருவதாகவும் அந்தப் பதிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
