ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரபல மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் மேடையிலேயே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், “நீங்க கிரிக்கெட்ல அதிக கவனம் செலுத்தணும், காதல்ல கம்மியா கவனம் செலுத்தணும்னு தோணலையா?” என ஹர்ஷா கேட்க, அதற்கு வைபவ் கோபமாக, “சார், நீங்க கிரிக்கெட்டைப் பத்தி அதிகமாவும், என் காதல் வாழ்க்கையைப் பத்தி குறைவாகவும் கேட்கணும்னு தோணலையா?” எனப் பதிலடி கொடுப்பது போலவும், இதைப் பார்த்து மேடையில் இருந்த சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ராகுல் டிராவிட், கௌதம் காம்பீர் ஆகியோர் திகைத்துப் போவது போலவும் காட்சிகள் இருந்தன.
*Vaibhav Suryavanshi*
hits 🎯 a big six of
*Harsha Bhogle’s Googly*This boy is from a different planet 🤣 pic.twitter.com/WqtYQ4hYB6
— Brig Dr Lovleen Satija🇮🇳🩺 (@BrigLSatija) June 2, 2026
“>
ஆனால், இந்த வீடியோ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் விவாதமாக மாறிய நிலையில், இதற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை ஹர்ஷா போக்லே தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
There is a fake dubbed clip of me and Vaibhav Sooryavanshi doing the rounds on social media. It depicts Vaibhav as being rude and cocky. Neither was that question asked nor was there an answer like that. It is cruel and mischievous especially towards a young kid who has been…
— Harsha Bhogle (@bhogleharsha) June 2, 2026
“>
அது முற்றிலும் போலியான, டப்பிங் செய்யப்பட்ட ஒரு எடிட்டிங் வீடியோ என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், “நிகழ்ச்சியின் போது அப்படி ஒரு கேள்வி கேட்கப்படவும் இல்லை, வைபவ் அப்படிப் பதிலளிக்கவும் இல்லை; சில உரையாடல்களிலேயே மிகவும் மரியாதையாக நடந்துகொண்ட ஒரு இளம் சிறுவனை, முரட்டுத்தனமாகவும் ஆணவமாகவும் சித்தரிப்பது மிகவும் கொடுமையான மற்றும் விஷமத்தனமான செயல்” என்று தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
