தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான முதியவர் புலவர் கணேசன். இவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை தீபாவின் தந்தை ஆவார்.

இந்நிலையில், முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை அருகே கணேசன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த முன்விரோதம் காரணமாகப் படுபயங்கரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் புலவர் கணேசன் உடல் முழுவதும் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் நடந்த இந்த  கொலை முயற்சி சம்பவம் ஒட்டுமொத்த தூத்துக்குடியையுமே உலுக்கி எடுத்துள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த முத்தையாபுரம் போலீசார், உடனடியாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அதிரடி வேட்டையில் இறங்கினர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளைப் போலீசார் இப்போ  மடக்கிப் பிடித்துக் கைது செய்து, இந்த கொடூர செயலுக்கு  பின்னணியில் இருக்கும் முழு காரணத்தைப் பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.