இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்த ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று இணையத்தை நெகிழச் செய்துள்ளது. அதில், உயரமான இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நாயின் முன்னால் நிற்கும் அந்தச் சிறுமி, மிகவும் அன்போடும் துணிச்சலோடும், “டாகி, உனக்கு பிஸ்கட் வேணுமா? பிஸ்கட் வேண்டாமா? அப்போ ரொட்டி வேணுமா? அதுவும் வேண்டாமா? இரு, நான் உனக்கு பிஸ்கட் வாங்கிட்டு வரச் சொல்றேன்” என்று இந்தி மொழியில் மழலை மாறாமல் தனியாகப் பேசிவிட்டு, இறுதியாக அந்த நாய்க்கு ‘பை’ (Bye) சொல்லிவிட்டுச் செல்கிறாள். அந்த நாய் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் சிறுமியின் பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் தங்களின் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “விலங்குகளிடம் எப்படி அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சிறுமிக்குக் கற்றுக் கொடுத்து வளர்த்த பெற்றோருக்குத்தான் முதல் மரியாதை” என்றும், “குழந்தைகளும் விலங்குகளும் மட்டுமே உலகை அழகாக்குகிறார்கள்” என்றும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வீடியோவை நகைச்சுவையாக அணுகிய சிலர், “அந்த நாய் மனதிற்குள் – எனக்கு பிஸ்கட்டும் வேண்டாம் ரொட்டியும் வேண்டாம், கொஞ்சம் நிம்மதியான தூக்கம் மட்டும்தான் வேண்டும் என்று நினைத்திருக்கும்” என்றும், “சிறுமி என்ன பேசுகிறாள் என்றே தெரியாமல் அந்த நாய் முழிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
