சிங்கப்பூரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘ஷாங்க்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில்’ (Shangri-La Dialogue), தைவான் விவகாரம் மற்றும் ராணுவ விரிவாக்கம் தொடர்பாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்து உலக அளவில் மாபெரும் விவாதப் புயலை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமர் சனா இ டகாய்ச்சி (Sanae Takaichi) தலைமையிலான ஜப்பான் அரசு, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் சும்மா இருக்காது என்று ஏற்கனவே அதிரடியாகத் தெரிவித்திருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஜப்பான் மீண்டும் பழைய ‘ராணுவ ஆதிக்க’ (New Militarism) பாதையை நோக்கி ஆபத்தாகச் செல்கிறது என்று சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டியது.
இதற்கு இந்த மாநாட்டில் பதிலடி கொடுத்துப் பேசிய ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி (Shinjiro Koizumi), “பெரிய அளவில் அணு ஆயுதங்களையும், பிரம்மாண்ட போர் விமானங்களையும் குவித்து வைத்துள்ள ஒரு நாடு (சீனா), அணு ஆயுதமே இல்லாத எங்களைப் பார்த்து ‘புதிய ராணுவ ஆதிக்கம்’ என்று லேபிள் ஒட்டுவது எவ்வளவு பெரிய விசித்திரம்? இதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று ஒட்டுமொத்த நாடுகள் முன்னிலையிலும் சீனாவுக்கு அக்மார்க் நெத்தியடி கொடுத்துப் பேசியுள்ளார்.
தடையை மீறி ஜப்பான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பரப்பி வருவதாகச் சீனா எகிறிய போதிலும், ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி தனது தைவான் தொடர்பான அதிரடிப் பேச்சைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.
வல்லரசு நாடுகளுக்கு இடையே சிங்கப்பூர் மாநாட்டில் அரங்கேறிய இந்த மெகா முட்டல் நியூஸ், தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி செம வைரலாகி வருகிறது.
