பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (84), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலை சென்னையில் காலமானார். தாயாரின் மறைவுச் செய்தி வெளியானபோது, நடிகர் அஜித் குமார் தனது புதிய திரைப்படப் பணிகளுக்காக துபாயில் இருந்தார். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டவுடன், அவர் தனது பணிகளைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உடனடியாக சென்னைக்குத் திரும்பினார். அஜித்தின் தாயார் மறைவுக்குத் திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில், அஜித்தின் தாயார் மறைந்த தகவலறிந்த தமிழக முதலமைச்சரும், நடிகருமான தளபதி விஜய், நள்ளிரவில் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் பிரபல நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜய், வெளியே வந்த நடிகர் அஜித்தைக் கட்டிப்பிடித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் அஜித்துக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் நள்ளிரவில் அஜித்தின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
