ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் பத்திரிகையாளர் அஸ்கர் அலி முபாரக் இடையே நடந்த ஒரு வேடிக்கையான குளறுபடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் அஸ்கர் அலி முபாரக் தன் பெயரை அறிமுகப்படுத்தியபோது, ‘முபாரக்’ என்ற அவரது குடும்பப் பெயரை வாழ்த்து என்று தவறாகப் புரிந்துகொண்ட அப்ரிடி, “உங்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிலளித்தார்.

உடனே அந்த பத்திரிகையாளர், “என் பெயர் முபாரக்” என்று விளக்கமளித்ததும், அப்ரிடி தன் தவறை உணர்ந்து சிரித்தபடி, “அப்படியென்றால் உங்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துகளும் முபாரக்” என்று கூற, அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் “Pure Comedy” என்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வங்கதேசத்திடம் 2-1 என தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூலம் ராவல்பிண்டியில் உள்ள தங்கள் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பலமாக மீண்டு வர ஆவலோடு இருக்கிறது.

“>

 

மறுபுறம், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பிறகு ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் 2027 உலகக் கோப்பைத் தொடருக்கான மிக முக்கியத் தயாரிப்பாக இந்த ஒருநாள் தொடரை இரு அணிகளுமே பார்க்கின்றன.