“- 96 ரன்கள் குவித்து அதிரடி காட்டியும் பலன் இல்லையே என்று மைதானத்திலேயே தொப்பியால் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுத 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் கண்ணீர் காட்சிகள், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களையும் சுக்குநூறாக உடைத்துள்ளது!

வெள்ளிக்கிழமை இரவு முல்லன்பூரில் நடந்த ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 போட்டியில், குஜராத் டைட்டன்ஸிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது.

ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால், ஜூரல் அவுட்டாகி ராஜஸ்தான் அணி சரிந்தபோது, அச்சமின்றி ஒற்றை ஆளாகப் போராடிய வைபவ், 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசத்தினார் (கடைசி 4 இன்னிங்ஸ்களில் 3-வது முறையாக சதம் மிஸ்!). இவரது அதிரடியால் ராஜஸ்தான் 214 ரன்கள் குவித்த போதிலும், அடுத்து களம் இறங்கிய குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் அசுரத்தனமாக 104 ரன்களும், சாய் சுதர்சன் 58 ரன்களும் குவித்து அந்த மெகா இலக்கை அக்குவேறாகப் பிரித்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மரண ஷாக் கொடுத்தனர்.

18.4 ஓவர்களில் இலக்கை எட்டி குஜராத் அணி அகமதாபாத் இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறிய நிலையில், இறுதிவரை போராடியும் தோற்றுவிட்டோமே என்ற ஏமாற்றத்தில் ஓய்வறையில் துண்டால் முகத்தை மூடி வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர் விட்டுக் கதறிய எமோஷனல் காட்சிகள் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களை உருக வைத்துள்ளது!

“>