“உங்க கட்சி மேலயும், தொண்டர்கள் மேலயும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. இல்ல உங்க தலைவர் விஜய் மேல நம்பிக்கை போயிடுச்சா? அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அதிமுக தொண்டர்களை உங்க கட்சிக்கு வாங்கன்னு கூவிக்கூவி அழைக்கிறீங்க?”
என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பாய்ந்துள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுகவிலிருந்து த.வெ.க-வுக்குத் தொண்டர்களை இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், ஆர்.பி.உதயகுமாரின் இந்த உக்கிரமான தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ளது.
“சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீது நம்பிக்கை இல்லாததால் தான், த.வெ.க இப்படி ஆள் பிடிக்கப் பார்க்கிறது” என்று ஆர்.பி.உதயகுமார் சரமாரியாகக் குற்றம் சாட்டியிருப்பது, புதிய த.வெ.க அரசு மற்றும் அதிமுக இடையே ஒரு நேரடி ‘ஹை-வோல்டேஜ்’ போர்க்களத்தை உருவாக்கியுள்ளதுடன், கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது!
