“சனாதனம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அப்படின்னா உங்க வயசான பெத்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியுமா?” என்று ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது!
சனாதனம் குறித்த சர்ச்சைகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், “சனாதனம் என்பது வெறும் மதம் அல்ல, அது ஒரு உன்னதமான வாழ்க்கை முறை; திருடக் கூடாது, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு பழங்கால நல்ல விஷயங்களை அது போதிக்குது” என விளக்கியுள்ளார்.
மேலும் பேசிய அர்ஜுன், “நம்ம சின்ன வயசுல பெத்தவங்க நம்மை எவ்வளவு அழகா பார்த்துக்கிட்டாங்க.. அதேபோல அவங்களோட முதுமை காலத்துல நாம அவங்களைக் கடவுள் போலப் பார்த்துக்கணும்னு சொல்றதுதான் சனாதனம்; இதை வேணாம்னு சொன்னா பெத்தவங்களை விரட்ட முடியுமா?” என்று எமோஷனலாகக் கேட்டு ஒட்டுமொத்த எதிர்த்தரப்பையும் அதிர வைத்துள்ளார்.
