திருவாரூர் மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ள சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளும் அரசைத் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரமும், சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின்வெட்டு காரணமாகக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மயக்கமடைந்த அநியாயமும் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு அச்சத்தை உண்டாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் நிர்வாகிகளும் அமைச்சர்களும் விளம்பரத்திற்காக மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்விற்குச் செல்வதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆய்விற்குச் செல்லும் இடங்களில் மருத்துவர்களைப் போல வெள்ளைக்கோட் அணிந்துகொண்டு, அங்கிருப்பவர்களைக் கேள்வி கேட்பது போல “ரீல்ஸ்” வீடியோ எடுத்து, அதைத் பின்னணி இசையுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட மட்டுமே அவர்கள் தவறுவதில்லை என்று அவர் சாடியுள்ளார்.

<a href="http://

“>

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வீடியோ எடுப்பது, வசனம் பேசுவதைத் தவிர நிர்வாகம் என்ற முக்கியப் பொறுப்பும் இருக்கிறது என்பதை எப்போது உணர்வீர்கள் என்றும், மருத்துவமனைகளின் தரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.