கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு விரைவாக நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக உறுதி அளித்துள்ளது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறையின் தற்போதைய புலனாய்வு மற்றும் விசாரணை சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று தங்களின் திருப்தியைத் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற கொடூரமான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
