நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆவதைத் தடுக்க, இந்த முறை ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

வினாத்தாள்கள் அச்சடிக்கப்படும் இடம் தொடங்கி, அவை பத்திரமாகத் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் வரை, ஒட்டுமொத்தப் பாதுகாப்புப் பணிகளுக்கும் ராணுவ வீரர்களைப் பயன்படுத்த இந்த அதிரடித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 21-ம் தேதி ‘NEET UG’ மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், வினாத்தாள் கசிவு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க ஆலோசித்து வருகிறது.