ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துவிட்டது. விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இந்த சீசன் முழுவதும் ஃபார்ம் அவுட் மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனைகளால் கடுமையான விமர்சனங்களுக்கும், ரசிகர்களின் கோபத்திற்கும் உள்ளாகி வந்தார்.
இருப்பினும், வான்ஹடே மைதானத்தில் நடந்த மும்பை அணியின் கடைசிப் போட்டிக்கு பின் ரசிகர்களை நெகிழ வைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. போட்டி முடிந்து வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம் திரும்பிய போதும், ரசிகர்கள் மைதானத்தில் தங்கி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
Hardik Pandya stands there looking at the crowd and Suddenly, he takes off his jersey and throws it into the crowd of fans and walking back to the dressing room.😭😂 pic.twitter.com/wui0p4HwbA
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 27, 2026
அப்போது படிக்கட்டின் உச்சியில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியா, ரசிகர்களின் ஆரவாரத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு, தான் அணிந்திருந்த மேட்ச் ஜெர்சியைக் கழட்டி ரசிகர்களை நோக்கி வீசினார். அதைப்பிடிக்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பாண்டியாவிற்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்து வருகிறது.
