ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசுர சாதனை படைத்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனதாரப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், “வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் மிகவும் அசாத்தியமாக இருந்தது. அதிலும் குறிப்பாக, அவரது கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் தனது முன் காலை அழகாக நகர்த்தி விளையாடுவது வியக்க வைக்கிறது” என்று அவரது பேட்டிங் டெக்னிக்கை பாராட்டியுள்ளார்.

​மேலும், இந்த பயமில்லாத சுதந்திரமான அணுகுமுறைதான் அவரை இப்படி அதிரடியாக விளையாட வைக்கிறது என்றும், அவரது இந்த இன்னிங்ஸ் மிக அற்புதம் என்றும் சச்சின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 15 வயதிலேயே வெறும் ராவான பவரை மட்டும் நம்பாமல், அசாத்தியமான விளையாட்டு நுணுக்கங்களுடன் விளையாடி சச்சின் டெண்டுல்கரின் பாராட்டையே பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய அசுர சக்தியாக உருவெடுத்துள்ளார் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடி வருகிறது.