நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்த அவர், தற்பொழுது அங்கிருந்தும் விலகி தவெக-வில் இணைந்துள்ளார்.
அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்த வெற்றிக்குமரன், தனது புதிய அரசியல் பயணம் குறித்துப் பேசியுள்ளார். இந்த புதிய அரசியல் பயணத்தின் மூலம் மக்கள் சேவைக்காக இனி முழு அர்ப்பணிப்புடன் செயல்படப் போவதாக அவர் எமோஷனலாகத் தெரிவித்துள்ளார்.
