சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நெட்டிசன்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. உலகில் பலரும் இதுவரை பார்த்திராத, விஷப் பாம்புகளின் நிலத்தடி உலகை மிக அருகில் காட்டும் வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபாயகரமான விஷப் பாம்பு ஒன்றின் தலையில் சிறிய அளவிலான நவீன கேமராவை பொருத்தி, அது தனது நிலத்தடி பொந்துக்குள் செல்லும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன. இருண்ட குகை போன்ற அமைப்பு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான முட்டைகள் மற்றும் அங்கு உலா வரும் பிற பாம்புகள் என இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாம்பு, தென்னாப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளில் காணப்படும் ‘ஷீல்டு-நோஸ்டு கோப்ரா’ (Shield-nosed Cobra) என்ற ஆபத்தான விஷப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாம்புகள் தங்களின் தனித்துவமான உடல் அமைப்பிற்கு பெயர் பெற்றவை. இதன் மூக்குப் பகுதியில் கடினமான மற்றும் வலுவான செதில் போன்ற அமைப்பு இருக்கும். இதன் உதவியோடு இவை நிலத்தில் மிக எளிதாகப் பொந்துகளை தோண்டிக் கொள்கின்றன. ஏதேனும் ஆபத்து நேரிடும் போது, சாதாரண நல்லபாம்புகளைப் போல தங்களது படத்தை விரித்து எதிரிகளை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை.
பாம்பின் தலையில் இருந்த கேமரா மூலம் அதன் பொந்திற்குள் இருக்கும் ரகசிய உலகம் மிகவும் விசித்திரமாகவும் மர்மமாகவும் காட்சியளிக்கிறது. பாம்பு உள்ளே செல்லச் செல்ல, குறுகிய சுரங்கப்பாதைகள், மண்ணால் ஆன சுவர்கள் மற்றும் ஆங்காங்கே கிடக்கும் முட்டைகள் கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சில இடங்களில் மற்ற பாம்புகளும் தென்படுவதால், இந்த வீடியோ பார்ப்பதற்கு சற்று அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
View this post on Instagram
இணையத்தில் பல பயனர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். முதல் பார்வையில் இது ஏதேனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சியைப் போல அத்தனை துல்லியமாக இருப்பதாகப் பாராட்டியுள்ளனர்.
ஒரு பயனர், “இது ஏதோ ஹாலிவுட் படத்தின் காட்சியைப் போல பிரம்மாண்டமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “முதல்முறையாக ஒரு பாம்பின் கண்ணோட்டத்திலேயே அதன் உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் @exploregocam என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான ஷேர்களையும் குவித்து இணையத்தில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.
