சென்னையில் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 8-ஆவது முறையாக உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 33 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 108.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் 99.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
