காதலின் பெயரால் ஒரு பெண்ணுக்கு நரகத்தையே காட்டிய புது தில்லியைச் சேர்ந்த வங்கி மேலாளரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்து, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
42 வயதான லெட்டிஷியா ஆர். என்ற பெண், தனது முன்னாள் துணையான 42 வயது வங்கி மேலாளர் கியோம் புச்சி மீது அளித்துள்ள புகார் நெஞ்சை பதற வைக்கிறது. கடந்த 2015 முதல் 2022 வரையிலான 7 ஆண்டு காலத்தில், ‘சாடோமாசோகிஸ்டிக்’ (Sadomasochistic) என்ற விசித்திர பாலியல் வன்கொடுமை விளையாட்டுகள் மூலம் தன்னை அந்த நபர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முழுமையாகக் கட்டுப்படுத்தி சித்திரவதை செய்ததாக லெட்டிஷியா கதறியுள்ளார்.
உடலுறவு வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்ற மிரட்டலால், கழுத்தை நெரிப்பது, உடலை எரிப்பது, மிருகப்புணர்ச்சி போன்ற கொடூரங்களுக்கு சம்மதிக்க வேண்டியிருந்ததாகக் கூறியுள்ள அவர், விபச்சாரத்தில் ஈடுபடக் கட்டாயப்படுத்தி தன்னை நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் முன்பின் தெரியாத 487-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அந்த மேலாளர் விற்றுப் பணம் சம்பாதித்த அதிர்ச்சித் தகவலையும் நீதிமன்றத்தில் உடைத்துள்ளார்.
4 பிள்ளைகளின் தாயான தான், உள்ளுக்குள் செத்துக்கொண்டிருந்ததாக லெட்டிஷியா வாக்குமூலம் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கியோம் புச்சி, இவை அனைத்தும் பரஸ்பர சம்மதத்துடன் நடந்தவை என்று வாதிட்ட போதிலும், நீதிமன்றம் அவனது கொடூரத்தை உற்றுநோக்கி 25 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது!
