தமிழகத்தில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி 5 காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்து தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திரைப்படத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் தேதியில் இருந்து முதல் ஒரு வாரத்திற்கு (7 நாட்களுக்கு) திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் வரை திரையிடிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அரசுப் பொது விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை தினங்களிலும் புதிய படங்களுக்குத் தினசரி 5 காட்சிகள் வரை திரையிடத் தியேட்டர் உரிமையாளர்களுக்குத் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதன் மூலம் திரையுலகின் பொருளாதாரம் மற்றும் வணிகம் மேலும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.