சென்னை மாநகரில் தமிழக முதல்வர் விஜய் அவர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் அரசின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜய் எனக்குத் தம்பி என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

மேலும் தற்போதைய தமிழக அரசைப் பார்க்கும்போது ஒரு தெளிவான நிர்வாகத்தைக் காண முடிகிறது. மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே தவெக அரசு தனது பணிகளைத் தொடங்கியுள்ளது,” என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளைப் பொறுமையுடன் அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “ஆட்சி அமைத்து வெறும் 10 நாட்களே ஆன நிலையில், குறுகிய காலத்தில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மாற்றம் நிச்சயம் நிகழும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த அரசுக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கினால், உறுதியாக ஒரு சிறந்த மாற்றத்தை நம்மால் காண முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.