மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்றை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் சிசிடிவி மூலம் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராவேத் பகுதியில் உள்ள ஒரு காபி கடை அருகே, கடந்த மே 19-ஆம் தேதி இரவு 10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதமேஷ் சந்திரகாந்த் காம்ப்ளே (26) என்ற விலங்கின ஆர்வலர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
🚨GRAPHIC WARNING 🚨
Caught On Camera: 35-Year-Old Man Sexually Assaults Female Dog In Pimpri-Chinchwad’s Ravet pic.twitter.com/bNi1usB2qX
— Pune First (@Pune_First) May 24, 2026
இப்புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ரகுநாத் ஷாகு (35) என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு போலீஸார் நோட்டீஸ் மட்டும் வழங்கி, உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர். குரலற்ற ஒரு வாயில்லா ஜீவனிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட இந்த நபரின் கொடூரச் செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், விலங்கு வதை தடுப்புச் சட்டங்களை மேலும் வலுவாக்க வேண்டும் என்றும் விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
