வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, போஸ்டன் பல்கலைக்கழக மாணவர் அபிஜித் தீப்கே என்பவரால் உருவாக்கப்பட்ட நையாண்டி அமைப்பான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது.
மேலும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதாக அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியிருந்தார். தனது தனிப்பட்ட கணக்கு மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் முடக்கப்பட்டதால், எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்டிருந்த தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வெற்றிகரமாக மீட்டெடுத்துவிட்டதாக அட்மின் அபிஜித் தீப்கே தற்போது தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பல ஹேக்கிங் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது மீண்டும் தனது கணக்கை மீட்டெடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
