கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தச் சமூக அவலத்தைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் நபர் ஒருவர் மிகுந்த வேதனையுடனும் ஆக்ரோஷத்துடனும் பேசியுள்ள உருக்கமான வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் தீயாய் பரவி, ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உலுக்கி வருகிறது.
நெருப்பு என்றால் சுடும் என்று அனைவருக்கும் தெரிந்து பயப்படுவது போல, பெண் பிள்ளைகளைத் தவறான எண்ணத்தோடு தொட்டால் தங்களுக்குக் மரண தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற பயம் இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு காமுகனுக்கும் வர வேண்டும் என்று அந்த நபர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
😭😭😭💔💔💔💔
அந்த வெறி நாய்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் 🙏🏻🥺
இவர்களுடன் தமிழக அரசு முழு துணையோடு நின்று பெற்று தர வேண்டும்..@CMOTamilnadu pic.twitter.com/emc65q74mQ
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) May 23, 2026
அரபு நாடுகளில் பெண் பிள்ளைகளைத் தொட்டாலே கொன்றுவிடுகிறார்கள், ஆனால் இங்கு ஏன் அத்தகைய கடுமையான சட்டங்களை அமல்படுத்த மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “மறுபடியும் மறுபடியும் ஆட்சி மாறினாலும் காட்சி மட்டும் ஏன் மாறவே மாட்டேங்கிறது?” எனப் பகிரங்கமாகக் கதறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்!
