அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மும்முனை மழையின் காரணமாக, நகரின் பெரும்பாலான முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள ஒரு சாலையில் தேங்கியிருந்த வெள்ள நீரில் அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றுள்ளது. அப்போது, பேருந்தின் படிக்கட்டில் இருந்து பிங்க் நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் கீழே இறங்க முயன்றபோது, சாலையில் ஓடிய வெள்ளத்தின் ஆழத்தையும் வேகத்தையும் கணிக்க முடியாமல் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
Woman got washed away in the NYC flood. 😭💔 pic.twitter.com/KFWwASKwYW
— Rain Drops Media (@Raindropsmedia1) May 21, 2026
அடுத்த சில விநாடிகளிலேயே அங்கிருந்த ஓடை போன்ற அசுர வெள்ள நீர், அந்தப் பெண்ணை நொடிப் பொழுதில் அடித்துச் சென்றுள்ளது. இதைப் பார்த்த அங்கிருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஓடும் இந்த 15 விநாடி கொடூர வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது.
நியூயார்க் நகரின் மோசமான பாதாள சாக்கடை கட்டமைப்பே இந்த அவல நிலைக்குக் காரணம் என்றும், பேருந்தை நடைபாதைக்கு அருகில் நிறுத்தாத ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்து வருகின்றன.
