பாகல்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் செய்த ‘கடத்தல் கேலி’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கையில் துணியுடன் பெண்களைத் துரத்துவது போலவும், “ஸ்ப்ரேயை எடு” என்று சத்தமிடுவது போலவும் நடித்தது, அங்குள்ள பயணிகளிடையே கடும் அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியது.

இந்த பொறுப்பற்ற செயலைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியது, பலரும் இது உண்மையான கடத்தல் என்று எண்ணி அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.

“>

இந்நிலையில் ‘ பொது இடங்களில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.