பிரேசிலின் கால்பந்து அணியில் உலகக்கோப்பை போட்டிக்கான வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், அந்த அணியின் கோல்கீப்பர் வெவர்டன் மயங்கி விழுந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்லோ அன்செலோட்டி தலைமையிலான பிரேசில் அணியில் தனக்கு இடம் கிடைத்த செய்தியைத் தனது குடும்பத்தினருடன் இணைந்து தொலைக்காட்சியில் பார்த்தபோது, மிகுந்த உற்சாகமடைந்த அவர், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மயங்கி விழுந்தார்.
மேலும் அவர் தரையில் விழுந்து கிடக்கும்போது, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய 38 வயதான வெவர்டன், மிகுந்த மகிழ்ச்சியில் தான் மயங்கி விழுந்ததாகக் குறிப்பிட்டார்.
🇧🇷Brazilian goalkeeper Weverton found out he made Brazil’s 2026 World Cup squad and immediately passed out in his living room
His family kept screaming and celebrating while he was literally unconscious on the floor before anyone noticedpic.twitter.com/8w68yjZHob https://t.co/hRP4aQ5JAe
— Mario Nawfal (@MarioNawfal) May 21, 2026
“>
இந்நிலையில் “நான் சிறிது நேரம் மயக்கமடைந்தேன், என் சகோதரர் என் மீது விழாதது அதிர்ஷ்டம்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார். ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் பங்கேற்றுள்ள இந்த அனுபவம் வாய்ந்த கோல்கீப்பர், மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது தனது வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
