இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியவருமான விஜய் சங்கர், தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறும் இந்த முடிவை அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது விளையாட்டுப் பயணத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், இனி தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலம் தமிழக அணிக்காக விளையாடி, பின்னர் தனது கிரிக்கெட் வாய்ப்புகளை மேம்படுத்த திரிபுரா அணிக்கு இடம்பெயர்ந்த விஜய் சங்கர், ஒரு திறமையான வீரராகவும் ஆல்-ரவுண்டராகவும் பலரது கவனத்தை ஈர்த்தவர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Shankar (@vijay_41)

“>

இந்நிலையில் இந்திய அணிக்காகவும் உலகக் கோப்பை தொடர் உட்பட பல்வேறு முக்கிய போட்டிகளில் விளையாடியுள்ள இவரது ஓய்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு நெகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கப்படுகிறது. விளையாட்டிலிருந்து விடைபெறும் இவருக்கு, இவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.