சுயமாக அறிவிக்கப்பட்ட ஆன்மீக குரு சாந்த் ராம்பால், கொளுத்தும் வெயிலில் ஆசிரமத்திற்குள் நடக்கும்போது சீடர்கள் கையோடு போர்ட்டபிள் ஏர் கூலர்களைத் தூக்கிக்கொண்டு பின்னாடியே ஓடிவந்து காத்துப்போடும் விசித்திர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இவருக்கு இருக்குற ஃபேன் ஃபாலோயிங்கால் ஆளு செம்ம கூலா இருக்கார்” என மரண கலாய் கலாய்த்துள்ளார்.
This is how our ‘babas’ go for a walk in the heat. With such a ‘fan following’ he looks so ‘cool’! pic.twitter.com/JWtjqnMTQv
— Harsh Goenka (@hvgoenka) May 19, 2026
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இப்போதைக்கு பெஸ்ட் ஜாப்பே பாபா ஆகுறதுதான்” என இவர்களின் சொகுசு வாழ்க்கையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், கொளுத்தும் கத்திரி வெயிலில் ஒரு முதியவருக்கு இப்படி ஏர் கூலர் வைப்பதில் எந்தத் தப்பும் இல்லை எனப் பாபாவின் ஆதரவாளர்கள் இணையத்தில் முட்டுக்கொடுத்து விவாதித்து வருகின்றனர்.
